/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குடிநீர் வராததை கண்டித்து குடங்களுடன் சாலைக்கு வந்த மக்கள் குடிநீர் வராததை கண்டித்து குடங்களுடன் சாலைக்கு வந்த மக்கள்
குடிநீர் வராததை கண்டித்து குடங்களுடன் சாலைக்கு வந்த மக்கள்
குடிநீர் வராததை கண்டித்து குடங்களுடன் சாலைக்கு வந்த மக்கள்
குடிநீர் வராததை கண்டித்து குடங்களுடன் சாலைக்கு வந்த மக்கள்
ADDED : ஜூன் 14, 2025 07:38 AM
கரூர்: கரூர் அருகே, குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் குவிந்தனர்.
கரூர் மாவட்டம், வேட்ட மங்கலம் பஞ்., நாடார்புரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், நாடார்புரம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக, சரிவர குடிநீர் வரவில்லை என கூறி, பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் சாலையில் குவிந்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: நாடார்புரம் பகுதியில், மூன்று மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லை. புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் பற்றாக்குறையால், விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
நாடார்புரம் பகுதி மக்களின், குடிநீர் பிரச்னையை தீர்க்காத பட்சத்தில் விரைவில், ரேஷன் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்து, சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். பிறகு சிறிது நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றனர்.