/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 14, 2025 05:01 AM
கரூர்: கரூர் அருகே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் நன்னியூர் புதுார் சாலை, வாங்கல் சாலையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகு-தியில் பொதுமக்கள் வசதிக்காக, மின் மாற்றி மற்றும் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளது. இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்-பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கவுள்-ளது. அப்போது, மின் கம்பங்களில் உள்ள செடிகள் மூலம், அடிக்-கடி மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் முன், மின் கம்பங்களில் உள்ள செடி-களை அகற்ற வேண்டியது அவசியம்.