/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு கரூரில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூரில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூரில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூரில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 16, 2025 01:25 AM
கரூர், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுக்க, கரூர் மனோகரா கார்னரில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூரில் நகரின் மையப்
பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரை சுற்றி, தின்னப்பா கார்னர் சாலை, ஜவஹர் பஜார் சாலை, திருச்சி ரோடு மற்றும் கோவை சாலைகள் செல்கிறது. அந்த, பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, வெளியேறும் பஸ்கள் மனோகரா கார்னரை சுற்றி செல்கிறது. இதனால், இந்த வழியாக நடந்து சாலையை, கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால், மனோகரா கார்னரை சுற்றி, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கரூரை விட பரப்பளவு குறைந்த, வருமானம் குறைந்த நாமக்கல், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டை சுற்றி, நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தொழில் வளம் மிகுந்த, கரூர் நகருக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கானோர் பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர். இவர்கள் வசதிக்காகவும், மனோகரா கார்னர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, நடைமேம்பாலம் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.