/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி
ADDED : அக் 23, 2025 01:44 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கால்பந்து போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற, ஐந்து பள்ளிகள் கலந்து கொண்டன.
இதில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியின், 14, 17 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் அணி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயதுக்குட்பட்டோர் மிக மூத்தோர் பிரிவில் மாணவர்கள் அணி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர். இதேபோல, 14 வயதுக்குட்பட்டோர் மாணவியர் அணி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் மாணவியர் அணி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி செயற்குழு மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


