/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்
ADDED : மே 16, 2025 01:25 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.
அரவக்குறிச்சி அருகே அஞ்சக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலுசாமி, 75. இவர் பள்ளப்பட்டியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில், நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மணமேட்டுப்பட்டி பகுதியில் சென்ற போது, அரவக்குறிச்சி அருகே உள்ள சோழதாசன்பட்டியை சேர்ந்த சிவச்சந்திரன், 32, லோகச்சந்திரன், 65, ஆகியோர் ஓட்டி வந்த என்பீல்ட் பைக் மோதியது. இந்த விபத்தில் பாலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவச்சந்திரன், லோகச்சந்திரன் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு, அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


