/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கடந்த முறை கட்டிய மின் தொகையை செலுத்த அதிகாரி அறிவுறுத்தல் கடந்த முறை கட்டிய மின் தொகையை செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்
கடந்த முறை கட்டிய மின் தொகையை செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்
கடந்த முறை கட்டிய மின் தொகையை செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்
கடந்த முறை கட்டிய மின் தொகையை செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்
ADDED : மே 22, 2025 02:03 AM
குளித்தலை, குளித்தலை சிந்தாமணிப்பட்டி உபகோட்டம், சிந்தாமணிப்பட்டி பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளர் அருள்பிரசன்னா, கடந்த 2 முதல் ஜூன் 19 வரை, மகப்பேறு மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
மேலும் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கீட்டு ஆய்வாளர் சாமிநாதன், கூடுதல் பொறுப்பாக உதவி மின் பொறியாளர் சிந்தாமணிப்பட்டி பிரிவில் கணக்கீட்டு பணி செய்து வருகிறார். மின் இணைப்புகளுக்கு கணக்கீட்டு பணி செய்ய, மாற்று பணியாளர்கள் இல்லாததால் வரவணை மற்றும் வீரணம்பட்டி மின் பகிர்மானத்தை சேர்ந்த நுகர்வோர்கள், முந்தைய மாத கணக்கீட்டினை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்தகவலை, குளித்தலை கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.