Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

கழிப்பறையில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

ADDED : செப் 17, 2025 02:13 AM


Google News
கரூர் :கரூர் அருகே, அட்டை கம்பெனி கழிப்பறையில் தவறி விழுந்த, வடமாநில ஊழியர் உயிரிழந்தார்.சட்டீஸ்கார் மாநிலம், ரயில் கார்க் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார், 38; இவர், கரூர் மாவட்டம், புகழூர் சடையம்பாளையம் பகுதியில் தங்கி, அட்டை கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த, 14ம் தேதி இரவு அட்டை கம்பெனியில் உள்ள, கழிப்பறைக்கு சென்றார்

. அப்போது, தவறி விழுந்த சந்திரகுமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்திரகுமார் உயிரிழந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us