/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரத்தம் உறையாமை நோய்க்கு மருந்து இல்லை: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனுரத்தம் உறையாமை நோய்க்கு மருந்து இல்லை: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
ரத்தம் உறையாமை நோய்க்கு மருந்து இல்லை: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
ரத்தம் உறையாமை நோய்க்கு மருந்து இல்லை: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
ரத்தம் உறையாமை நோய்க்கு மருந்து இல்லை: பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 16, 2024 01:49 AM
கரூர்: ரத்தம் உறையாமை நோய்க்கு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்-துவமனையில் மருந்து இருப்பு இல்லை என்பதால் தவித்து வரு-கிறோம் என, ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டோர் சங்கத்-தினர், கரூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், ஹீமோபிலியா (ரத்தம் உறையாமை) நோயால், 3 முதல் 60 வயது வரை உள்ள, 52 பேர் பாதிக்கப்பட்-டுள்ளனர். இவர்களுக்கு அடிபட்டு ரத்தம் ஏற்பட்டாலோ, ரத்த கட்டு ஏற்பட்டாலோ பேக்டர் VIII என்ற மருந்து கொடுத்தால் மட்-டுமே, ரத்தம் வெளியேறுவதை தடுக்க மற்றும் ரத்த கட்டை சரி செய்ய முடியும். காயம் ஏற்பட்டவுடன் மருந்து கொடுக்கவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இரு மாதங்களுக்கு மேலாக இந்த மருந்து கையிருப்பு இல்லை. திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சென்று, சிகிச்சை பெற்று வந்தோம். அங்கும், மருந்து இருப்பு இல்லை என்று தெரிவித்து விட்டனர். இதனால் நாங்கள் சிரமப்படு-கிறோம். சென்னை, கோவை, பெங்களூரு நகரங்களில் இருந்து சிரமப்பட்டு மருந்து வாங்கினாலும், இதன் விலை, ஒரு டோஸ், 25 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள், மருந்து வாங்க முடியவில்லை. கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனையில், இந்த மருந்து கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.