/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம்: 34 தீர்மானங்கள் நிறைவேற்றம் நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம்: 34 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம்: 34 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம்: 34 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நங்கவரம் டவுன் பஞ்., கூட்டம்: 34 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 01, 2025 01:31 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில் நேற்று முன்தினம் நடந்த சாதாரண கூட்டத்திற்கு, தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர்அன்பழகன், செயல் அலுவலர் காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலகுறிச்சியில், ரூ.10 லட்சம் மதிப்பில் வடிகால் அமைத்தல், குறிச்சியில், ரூ. 9 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பலப்படுத்துதல், வார்டு எண்-6ல், சாவாரிமேடு ரேஷன் கடை பகுதியில். ரூ.10 லட்சத்தில் வடிகால் அமைத்தல், வார்டு 13ல், வி.ஆர்.ஓ.. காலனி மேற்கு குறுக்குத்தெரு தார்ச்சாலையை பலப்படுத்த, ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள் செந்தில்வேலன், லதா, ரவி, ராஜப்பா, பாலன் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். மொத்தம், 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.