/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு
ADDED : செப் 23, 2025 01:22 AM
கரூர், டாஸ்மாக் பார்களில், சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது என, நாம் தமிழர்
கட்சியின் வக்கீல் அணி மாநில செயலர்
நன்மாறன் தலைமையில் கரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மதியம், 12:00 மணிக்கு திறக்கப்படுகின்றன. அதற்கு முன் பார்கள் திறக்கப்பட்டு இரவு, 12:00 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நிரந்தரமாக மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த, 7ம் தேதி கலெக்டர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும், காளியப்பனுார் பகுதியில் உள்ள மதுபான பாரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை கைவிட வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.