/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மருத்துவமனை பகுதிகளில் இடையூறு: எம்.பி., குற்றச்சாட்டு மருத்துவமனை பகுதிகளில் இடையூறு: எம்.பி., குற்றச்சாட்டு
மருத்துவமனை பகுதிகளில் இடையூறு: எம்.பி., குற்றச்சாட்டு
மருத்துவமனை பகுதிகளில் இடையூறு: எம்.பி., குற்றச்சாட்டு
மருத்துவமனை பகுதிகளில் இடையூறு: எம்.பி., குற்றச்சாட்டு
ADDED : செப் 20, 2025 02:17 AM
நாமக்கல்,நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இன்று (நேற்று) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக, அ.தி.மு.க.,வினர் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
அதேபோல், பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலைகளில் பிரசாரம் செய்வதால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வர முடியாத சூழல் உள்ளது. மேலும், உடல்நல குறைவு ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது. ராசிபுரத்தில் இ.பி.எஸ்., பிரசாரம் செய்யும் பகுதியில், ஏழு மருத்துவமனைகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான இடங்கள் உள்ளன. அதில் நிகழ்ச்சியை நடத்துங்கள். இ.பி.எஸ்., பிரசாரம் செய்வதை, நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறின்றி பிரசாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.