/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளை பராமரிக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளை பராமரிக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளை பராமரிக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளை பராமரிக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகளை பராமரிக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
ADDED : செப் 15, 2025 02:01 AM
கரூர்:கரூர்---சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நடுப்பகுதியில் வளர்ந்துள்ள அரளி உள்ளிட்ட செடிகளால், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் செடிகளை பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
கரூர்--சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் நடப்பட்ட அரளி பூ உள்ளிட்ட பல்வேறு செடிகள் உயரமாக வளர்ந்துள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல், வளைவுகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, சாலையில் வளர்ந்துள்ள செடிகளை சாப்பிட ஆடு, மாடுகள் அதிகளவில் வருகின்றன. அப்போது திடீரென ஆடு, மாடுகள் நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடுவதால், வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், காலை, மாலை நேரங்களில் அரளி பூக்களை அப்பகுதி மக்கள் சிலர் பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அப்போது, வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அதிகளவில் செடிகள் வளர்ந்து இருப்பதால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல், விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
எனவே, கரூர்--சேலம் மற்றும் மதுரை நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் உள்ள, அரளி பூ உள்ளிட்ட செடிகளின் அளவை பராமரிக்க, நெடுஞ்சாலைதை்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.