/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாதியில் நிற்கும் சாலை பணி சிரமப்படும் வாகன ஓட்டிகள் பாதியில் நிற்கும் சாலை பணி சிரமப்படும் வாகன ஓட்டிகள்
பாதியில் நிற்கும் சாலை பணி சிரமப்படும் வாகன ஓட்டிகள்
பாதியில் நிற்கும் சாலை பணி சிரமப்படும் வாகன ஓட்டிகள்
பாதியில் நிற்கும் சாலை பணி சிரமப்படும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 22, 2025 01:53 AM
கரூர்,கரூர், ஆத்துார் பிரிவு சாலையில் பாதியில் நிற்கும் சாலை பணியால், வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆத்துாருக்கு பிரிவு சாலை செல்கிறது. இதன் வழியாக பஸ் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இதையடுத்து, பழைய சாலையை பெயர்த்தெடுத்து, புதிதாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பணி முடிவு பெறாமல் உள்ளதால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வழியில், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து செல்ல முடியாத நிலையில், இடறி கீழே விழுகின்றனர். முடங்கிய பணிகளை மீண்டும் துவங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.