/உள்ளூர் செய்திகள்/கரூர்/தாய், மகன் மாயம்: போலீசில் தம்பி புகார்தாய், மகன் மாயம்: போலீசில் தம்பி புகார்
தாய், மகன் மாயம்: போலீசில் தம்பி புகார்
தாய், மகன் மாயம்: போலீசில் தம்பி புகார்
தாய், மகன் மாயம்: போலீசில் தம்பி புகார்
ADDED : பிப் 24, 2024 03:44 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு, 27. இவர் மணப்பாறை டி.என்.பி.எல்., நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக உள்ளார். இவரது அக்கா தனலட்சுமி, 30. புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அடுத்த கீழக்குறிச்சியில் வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
கணவர், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு, கடந்த, 18ல் காலை 11:00 மணிக்கு தனலட்சுமி, தன் மகன் யோகேஸ்வரன், 8, என்பவரை அழைத்துக் கொண்டு நாகனுார் வீட்டிற்கு வந்தார். திரும்ப கீழக்குறிச்சி செல்வதாக அக்கா, அவரது மகன் இருவரையும் அழைத்துக் கொண்டு, தோகைமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து மணப்பாறை செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட்டனர். தனலட்சுமி, அவரது மகன் யோகேஸ்வரன் இருவரும் கீழக்குறிச்சி செல்லவில்லை என தெரியவந்தது. தாய், மகன் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் எந்தவிதமாக தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தனலட்சுமி தம்பி பிரபு கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.