/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்பு மோகனுார் ராணுவ வீரருக்கு பாராட்டுஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்பு மோகனுார் ராணுவ வீரருக்கு பாராட்டு
ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்பு மோகனுார் ராணுவ வீரருக்கு பாராட்டு
ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்பு மோகனுார் ராணுவ வீரருக்கு பாராட்டு
ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்பு மோகனுார் ராணுவ வீரருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 11, 2025 02:27 AM
மோகனுார், ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்ற மோகனுாரை சேர்ந்த ராணுவ வீரருக்கு, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம், இந்திய ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற தாக்குதல் மூலம், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தகர்த்தது.
இந்த ராணுவ நடவடிக்கையில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த சின்னகரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி மகன் சக்ரவர்த்தி என்ற ராணுவ வீரர் கலந்துகொண்டு, சிறப்பாக பணிபுரிந்தார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், நாமக்கல் கொ.ம.தே.க.,-எம்.பி., மாதேஸ்வரன், ராணுவ வீரரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தார். கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.