/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரவக்குறிச்சி தாசில்தார் ஆபீசில் அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்அரவக்குறிச்சி தாசில்தார் ஆபீசில் அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
அரவக்குறிச்சி தாசில்தார் ஆபீசில் அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
அரவக்குறிச்சி தாசில்தார் ஆபீசில் அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
அரவக்குறிச்சி தாசில்தார் ஆபீசில் அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 24, 2025 06:50 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, நங்காஞ்சி ஆறு திட்டத்திற்கு நிலம் வழங்கிய, 67 உரிமைதாரர்களுக்கு, 1.81 கோடியே, 89,000 ரூபாய் மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையை, அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள நங்காஞ்சி ஆறு நீர்த்தேக்க திட்டம், கடந்த, 1989ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் உள்ள, 110.44 ஏக்கரில், 116 கி.மீ., நீளத்தில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு, விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு நிதியாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தற்போது, முதல் கட்டமாக, 67 நில உரிமைதாரர்களுக்கு, 1.81 கோடியே, 89,000 ரூபாய் இழப்பீடு தொகையை, நேற்று அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி காசோலையாக வழங்கினார்.தொடர்ந்து, 44 பயனாளிகளுக்கு, 17.60 லட்சம் ரூபாய் மதிப்பில், விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினார். மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறி எம்.எல்.ஏ., இளங்கோ, அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.