/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பால் வியாபாரிக்கு கடப்பாறை அடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு பால் வியாபாரிக்கு கடப்பாறை அடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு
பால் வியாபாரிக்கு கடப்பாறை அடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு
பால் வியாபாரிக்கு கடப்பாறை அடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு
பால் வியாபாரிக்கு கடப்பாறை அடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 15, 2025 01:28 AM
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, நிலத்தகராறு காரணமாக, பால் வியாபாரியை கடப்பாறையால் அடித்த, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சேமங்கியை சேர்ந்தவர் ரவி, 48; பால் வியாபாரி. இவருக்கும், சகோதரர் குணாளன், 50, என்பவருக்கும் நிலம் தொடர்பாக, முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரவியின் வீட்டுக்கு சென்ற குணாளன், தந்தை கணேசன், தாய் அருணா, 72, உறவுக்கார பெண் சுந்தரி, 40, ஆகியோர், ரவியிடம் நிலம் தொடர்பாக பேசி தகராறு செய்துள்ளனர்.
பிறகு, அங்கிருந்த கடப்பாறை எடுத்து குணாளன், ரவியை அடித்துள்ளார். அதில், படுகாயம் அடைந்த ரவி, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ரவி போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, குணாளன், கணேசன், அருணா, சுந்தரி ஆகியோர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.