/உள்ளூர் செய்திகள்/கரூர்/ த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் மாதர் சங்க குழுவினர் ஆய்வு த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் மாதர் சங்க குழுவினர் ஆய்வு
த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் மாதர் சங்க குழுவினர் ஆய்வு
த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் மாதர் சங்க குழுவினர் ஆய்வு
த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தில் மாதர் சங்க குழுவினர் ஆய்வு
ADDED : அக் 07, 2025 01:06 AM
கரூர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், உண்மை கண்டறியும் குழுவினர், த.வெ.க., பொதுக்கூட்டம் நடந்த, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மாநில செயற்குழு உறுப்பினர் நிர்மலா ராணி கூறியதாவது:
த.வெ.க.,வுக்கு, ரோடு ேஷா நடத்த அனுமதி அளித்திருக்கக் கூடாது. அக்கட்சி தொண்டர்கள், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டனர். கூட்டம் நடத்தும் போது, பொது மக்களின் பாதுகாப்பு, சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி, துணைத்தலைவர் வாலன்டினா, கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர் ஜோதிபாசு,
மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட, பலர் பங்கேற்றனர்.


