/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
ADDED : மே 21, 2025 01:20 AM
கரூர், கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று மாலை பூத வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த, 16ல் பூச்சொரிதல் ஊர்வலம், 18ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.
நேற்று மாலை பூத வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 26ல் தேரோட்டம், 27ல் மாவிளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஜூன், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.