/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் குடிபுகுதலுடன் நிறைவு மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் குடிபுகுதலுடன் நிறைவு
மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் குடிபுகுதலுடன் நிறைவு
மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் குடிபுகுதலுடன் நிறைவு
மாரியம்மன் கோவில் திருவிழா அம்மன் குடிபுகுதலுடன் நிறைவு
ADDED : ஜூன் 09, 2025 03:38 AM
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா, அம்மன் குடிபு-குதல் நிகழ்ச்சியுடன், நேற்று நிறைவடைந்தது.
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா விமரிசையாக நடக்கும். அதன்படி, கடந்த மே, 11ல் கம்பம் நடுதல் திருவிழா தொடங்கியது. பின், பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகா சண்டியாகம், தேரோட்டம், அலகு குத்துதல், மாவிளக்கு, அக்னிகரக ஊர்வலம், கம்பம் ஆற்-றுக்கு செல்லுதல், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்-சவ பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன், மாரியம்மன் கோவில் வைகாசி திரு-விழா நிறைவடைந்தது. அப்போது, நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவா-மியை வழிபட்டனர்.