/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
ADDED : ஜூன் 24, 2025 12:58 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் விவேக், 24, விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் லாலாபேட்டை ரயில்வே கேட் அருகே நடந்து சென்றார்.
அப்போது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த தர்மதுரை, 30, என்பவர் மது குடிப்பதற்காக விவேக் சட்டை பாக்கெட்டிலிருந்து, 100 ரூபாயை கத்தியை காட்டி மிரட்டி பறித்தார். அவர் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையை கைது செய்தனர்.