ADDED : ஜூன் 28, 2025 07:54 AM
சேந்தமங்கலம்: நாமக்கல்லில் இருந்து தேங்காய் லோடு ஏற்றுவதற்காக, நேற்று லாரி ஒன்று பேளுக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் அஜித்குமார் ஓட்டி வந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டோரத்தில் இருந்த, 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து டிரைவர் அஜித்குமாரை மீட்டனர். இதையறிந்து வந்த லாரி உரிமையாளர், அஜித்குமாரை தாக்கினார். இதுகுறித்து வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால், பேளுக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.