/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 2026 ஜூன் வரை நீட்டிப்பு மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 2026 ஜூன் வரை நீட்டிப்பு
மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 2026 ஜூன் வரை நீட்டிப்பு
மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 2026 ஜூன் வரை நீட்டிப்பு
மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 2026 ஜூன் வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 02, 2025 02:03 AM
கரூர், மனைகளை வரன்
முறைப்படுத்தும் திட்டத்தில், அடுத்த ஆண்டு ஜூன், 30 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும், அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 2016 அக்., 20 அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளுக்கு உட்பட்டு, 2026 ஜூன் 30 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.