/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலை ஜி.ஹெச்.,ல்் மருத்துவ இணை இயக்குனர் ஆய்வுகுளித்தலை ஜி.ஹெச்.,ல்் மருத்துவ இணை இயக்குனர் ஆய்வு
குளித்தலை ஜி.ஹெச்.,ல்் மருத்துவ இணை இயக்குனர் ஆய்வு
குளித்தலை ஜி.ஹெச்.,ல்் மருத்துவ இணை இயக்குனர் ஆய்வு
குளித்தலை ஜி.ஹெச்.,ல்் மருத்துவ இணை இயக்குனர் ஆய்வு
ADDED : மே 23, 2025 01:12 AM
குளித்தலை, குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
குளித்தலை அரசு மருத்துவமனைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். குளித்தலை, மாயனுார், அய்யர்மலை மற்றும் முசிறி, தொட்டியம் சுற்றுவட்டார பகுதிகளின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது. இங்குள்ள செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்து, மருத்துவமனை முன் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை பார்ப்பதற்காக வருவோர், கழிவுநீரை மிதித்தபடி வருவதால் நோயாளிகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் அளித்த புகார்படி, மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் செழியன் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் கழிவு நீர் தேக்கம் ஏற்படுவதை அகற்றிட, நிதியின்மையால் உடனுக்குடன் குறைகள் சரிசெய்ய முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் மூலம் கழிவு நீர் அகற்றப்பட்டது. தொடர்ந்து, கலெக்டரிடம் தெரிவித்து உரிய நிதி பெற்று நிரந்தரமாக, கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.