/உள்ளூர் செய்திகள்/கரூர்/கவாத்து பயிற்சி நிறைவு விழா கரூர் எஸ்.பி., பிரபாகர் நடனம்கவாத்து பயிற்சி நிறைவு விழா கரூர் எஸ்.பி., பிரபாகர் நடனம்
கவாத்து பயிற்சி நிறைவு விழா கரூர் எஸ்.பி., பிரபாகர் நடனம்
கவாத்து பயிற்சி நிறைவு விழா கரூர் எஸ்.பி., பிரபாகர் நடனம்
கவாத்து பயிற்சி நிறைவு விழா கரூர் எஸ்.பி., பிரபாகர் நடனம்
ADDED : ஜன 31, 2024 01:09 AM
கரூர்:கரூரில் நடந்த கவாத்து பயிற்சி நிறைவு விழாவில், எஸ்.பி., நடனமாடி போலீசாரை உற்சாகப்படுத்தினார்.
தமிழக காவல் துறையில் போலீசாருக்கு ஆண்டுதோறும் நினைவூட்டல் கவாத்து பயிற்சி நடப்பது வழக்கம். கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கடந்த மாதம் கவாத்து பயிற்சி துவங்கியது.
கடந்த 28ம் தேதி இரவு நடந்த கவாத்து பயிற்சி நிறைவு விழாவில், திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பாடப்பட்ட பாடல்களுக்கு கவாத்து பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நடனம் ஆடினர்.
அதைப் பார்த்த கரூர் மாவட்ட எஸ்.பி., பிரபாகரும், போலீசாருடன் சேர்ந்து நடனம் ஆடி, அவர்களை உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.