ADDED : ஜூன் 17, 2024 01:14 AM
விளக்குகள் இல்லாததால்
சாலையில் அவஸ்தை
கரூர்: கரூர் அருகே நெரூரில் இருந்து, திருமுக்கூடலுார் செல்லும் சாலை, பல கிராமங்கள் வழியாக செல்கிறது. இருபக்கமும் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளது. நெல், கோரைபுல் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த சாலையில் பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் நெரூர் வழியாக, திருமுக்கூடலுார் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் பெரும் அவதிப்படுகின்றனர். விஷஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே, நெரூர் முதல் திருமுக்கூடலுார் வரை விளக்குகள் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணராயபுரம் தாலுகா
ஆபீஸில் நாளை ஜமாபந்தி
கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், நாளை ஜமாபந்தி நிகழ்ச்சி (18 ல்) துவங்குகிறது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகிக்கிறார். முதல் நாள் பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், வடக்கு மற்றும் தெற்கு மாயனுார், மணவாசி கிராமங்களுக்கும், 20ல் திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் வடக்கு மற்றும் தெற்கு, சித்தலவாய், சேங்கல், முத்து ரெங்கம்பட்டி, 21ல் சிந்தலவாடி குறு வட்டத்திற்க்கு உட்பட்ட சிந்தலவாடி, மகாதானபுரம் வடக்கு மற்றும் தெற்கு, கம்மநல்லுார், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கருப்பத்துார்.
வரும், 25ல் பஞ்சப்பட்டி குறு வட்டத்திற்கு உட்பட்ட சிவாயம் வடக்கு, தெற்கு, பாப்பகாப்பட்டி, வயலுார், வீரியபாளையம், போத்துரவூத்தன்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு ஜமாபந்தி நிறைவு நாளில் கலெக்டர் தலைமையில் நடக்கிறது,
கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட மக்கள், கோரிக்கை மனுக்களை ஜமாபந்தியில் கொடுத்து பயன்பெறலாம்.
பெரியகாண்டியம்மன் பரிவார
சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம்
கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகம் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. விநாயகர், பெரியகாண்டியம்மன், தங்காள், மதுரை வீரன், கருப்பண்ண சுவாமி, காத்தவராய சுவாமி, வீரமலையாண்டி, வையமலைசாம்பவான், காட்டு கோவில் சுவாமி ஆகியவைகளுக்கு கும்பாபி ேஷக விழா, கடந்த 12ல் சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு துவங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து ஹோமம், செய்யப்பட்டது. 13ல் அம்பிகைக்கு முதற்கால யாக வேள்வி, 14ல் பராசத்திக்கு இரண்டாம் கால யாக வேள்வி, சகல ஜஸ்வர்யங்களை தரும் அன்னைக்கு மூன்றாம் கால யாக வேள்வி, குங்குமகாரிக்கு நான்காம் கால யாக வேள்வி, அன்னை பெரியகாண்டியம்மன் சுவாமிக்கு ஐந்தாம் காலயாக வேள்வியுடன், நேற்று காலை, 6:30 மணிக்கு, 108 வகை மூலிகைகளால் பூஜை செய்து விநாயகர், பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. இதையடுத்து, பெரியகாண்டியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
வைரமடை பஸ் நிறுத்தத்தில்
நிற்க மறுக்கும் பஸ்கள்
க.பரமத்தி: கரூர் - கோவை மற்றும் திருப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 33 கி.மீ., தொலைவில் வைரமடை பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு மொஞ்சனுார், கந்தசாமிவலசு, ரெட்டிவலசு, தொட்டம்பட்டி, தொட்டியபட்டி, பசுபதிபாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் தினமும் கரூருக்கு வேலைக்கு செல்லவும், கோவை, திருப்பூர் ஆகிய வெளியூர்களுக்கு செல்லவும் பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர். கரூர், திருப்பூர், கோவை செல்லும் பஸ்கள் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு பஸ்கள் இங்கு நிற்பதில்லை. மேலும் கரூர் அல்லது தென்னிலை வழியாக, வைரமடை செல்லும் பயணிகளை ஏற்க மறுக்கின்றனர். இதனால் மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.