ADDED : ஜூன் 09, 2024 03:56 AM
நிழற்கூடத்தை
சீரமைக்கணும்
தான்தோன்றிமலை:
கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி அருகே சாரதா நகர் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தனியார் மகளிர் கல்லுாரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், சாரதா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கட்டப்பட்டது.
தற்போது, நிழற்கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. சீரமைக்க கோரி, பல முறை புகார் செய்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இரும்பு தடுப்புகளால்ஓட்டுனர்களுக்கு ஆபத்து
தான்தோன்றிமலை: கரூர்-கோவை சாலை திருகாம்புலியூர் பகுதியில், சாலையின் நடுவில், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் உள்ள இரும்பு தடுப்புகள் வளைந்தும், உடைந்த நிலையிலும் உள்ளது.
இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடைந்த இரும்பு தடுப்புகளை அகற்றி விட்டு புதிதாக வைக்க வேண்டியது அவசியம். இரவு நேரத்தில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக, ஒளிரும் விளக்குகளை வைக்க வேண்டும்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில்நாளை மக்கள் குறைதீர் கூட்டம்
கரூர்: நாளை முதல், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் திங்கள்கிழமை தோறும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.