/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
ADDED : ஜன 07, 2024 11:05 AM
கிருஷ்ணராயபுரம்; முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம், மாயனுார், கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளி வளாகத்தில் நடந்தது.
அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 'நுாற்றாண்டு விழா நாயகர், முன்னாள் முதல்வர் கருணாநிதி சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது' என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்ம் நடத்தப்பட்டது. 69 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்ணுக்கு நீதி, தேசியக்கொடி ஏற்றுவதில் மாநில உரிமை கண்ட கருணாநிதி ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, சட்டசபை பேரவை கூடுதல் செயலர்கள் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ஜெய்கணேஷ், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, தனிதுணை ஆட்சியர் சைபுதீன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், தலைமையாசிரியர்கள் விஜயலட்சுமி, ரத்தினம், கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலர் சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.