/உள்ளூர் செய்திகள்/கரூர்/கடவூர் யூனியன் கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்கடவூர் யூனியன் கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடவூர் யூனியன் கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடவூர் யூனியன் கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடவூர் யூனியன் கூட்டம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜன 07, 2024 11:29 AM
குளித்தலை: கடவூர் யூனியன் அவசர கூட்டம், யூனியன் குழுத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் கைலாசம், யூனியன் கமிஷனர்கள் சுரேஷ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில்,'' பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்துார், செம்பியநத்தம், ஆதனுார், தரகம்பட்டி மற்றும் கீழப்பகுதி பஞ்., கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ள பாலவிடுதியில், புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கவுன்சிலர் மலையாண்டி பேசுகையில்,'' கடவூர் பஞ்சாயத்தில், சுற்றுலாத்தலமாக விளங்கும் பொன்னனியாறு அணைக்கு செல்லும் சாலையை நெடுஞ்சாலைத்துறையின் கீழ் அறிவிக்க வேண்டும்,'' என்றார்.
யூனியன் குழு தலைவர் செல்வராஜ் பேசுகையில், ''புதிய துணை சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யூனியன் பொறியாளர், பொன்னனியாறு மூலம் அணைக்கு செல்லும் சாலை ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.