/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் ஜல்லிக்கட்டு விழா ஆலோசனை கூட்டம்குளித்தலையில் ஜல்லிக்கட்டு விழா ஆலோசனை கூட்டம்
குளித்தலையில் ஜல்லிக்கட்டு விழா ஆலோசனை கூட்டம்
குளித்தலையில் ஜல்லிக்கட்டு விழா ஆலோசனை கூட்டம்
குளித்தலையில் ஜல்லிக்கட்டு விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 08, 2025 06:45 AM
குளித்தலை: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில்,ஆர்.டி. மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா தொடர்பான, கமிட்டி ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில் நடந்தது.
டி.எஸ்.பி., செந்தில்குமார், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் இந்துமதி, கால்நடை கோட்ட உதவி இயக்குனர் முரளிதரன், வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க உள்ள காளைகள், வீரர்கள் குறித்த விபரங்களை அமைப்பாளர்கள் முன்னரே விழா கமிட்டியிடம் தெரிவித்து, முன் அனுமதி பெறுதல் வேண்டும். விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை, விழா அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு ஊக்க மருந்து மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ, விழா அமைப்பாளர்கள் செய்யக்கூடாது. பொது மக்கள், பார்வையாளர்களை கண்காணிக்கும் வகையில் கூடுதலாக, எட்டு 'சிசிடிவி' கேமரா பொருத்துதல், ஜல்லிக்கட்டு விழாவை தனியாக இரண்டு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தல். கடந்த ஆண்டை விட, இரண்டு மடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் சங்கன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, சின்னையன் மற்றும் விழா குழுவினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.