/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 02, 2025 02:04 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், ராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த வீரரின் மனைவிக்கு, குடும்ப ஓய்வூதிய ஆணையை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில், நேற்று முன்தினம் ஓய்வூதிய குறை தீர்ப்பு, ஓய்வூதிய சேவை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டத்திற்கு ஓய்வூதிய சேவை வாகனம் வந்தடைந்தது. தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
ராணுவத்தில் பணிபுரிந்த தனது கணவரின் இறப்பிற்கு பிறகு, குடும்ப ஓய்வூதியம் பெறாமல் இருந்த விஜயலட்சுமி கலந்து கொண்டு தனது குறைகளை தெரிவித்தார். அவரின் மனு மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக குடும்ப ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பாதுகாப்பு கணக்கு
கள் துணை கட்டுப்பாட்டாளர் தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.