/உள்ளூர் செய்திகள்/கரூர்/ போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு
ADDED : மே 11, 2025 01:02 AM
கரூர், 'போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் சேரலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் (போலீஸ் எஸ்.ஐ) தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. சிறந்த பயிற்றுனர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்ட வணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு புதன்
கிழமையும் மாதிரி தேர்வுகள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரத்தேர்வுகள் நடக்கின்றன. மேலும் விவரங்களுக்கு 04324- 223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, அதில்,
கூறப்பட்டுள்ளது.