/உள்ளூர் செய்திகள்/கரூர்/நெரூர் வாய்க்காலில் மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டுமான பணி தீவிரம்நெரூர் வாய்க்காலில் மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டுமான பணி தீவிரம்
நெரூர் வாய்க்காலில் மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டுமான பணி தீவிரம்
நெரூர் வாய்க்காலில் மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டுமான பணி தீவிரம்
நெரூர் வாய்க்காலில் மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டுமான பணி தீவிரம்
ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கரூர்: நெரூர் வாய்க்காலில் மண் அரிப்பு தடுக்க, தடுப்பு சுவர் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில், கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்தில், 22 ஆயிரத்து, 550 ஏக்கர், புகளூர் வாய்க்காலில், 3,000 ஏக்கர், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில், 1,500 ஏக்கர் தென்கரை, நெரூர், வடகரை உள்பட, 17 வாய்க்கால் மூலம், 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். நன்னியூர் அருகில் புகளூர் வாய்க்காலில் இருந்து, நெரூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. நன்னியூர், நெரூர், வடபாகம் நெரூர், வாங்கல் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயனடைகின்றனர்.
வெற்றிலை, வாழை, மஞ்சள், கரும்பு, கோரைப்புல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் திறக்கப்படும் போது, தண்ணீர் நெரூர் வாய்க்கால் வழியாக செல்கிறது. வாய்க்காலில், பல இடங்களில் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வாய்க்கால் துார் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
வாய்க்கால் கரையில், சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை தடுக்க நெரூர் அருகில் வாய்க்காலில், 800 மீட்டருக்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், சம்பா சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் துார் வாரும் பணியை முடிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.