/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாம் ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாம்
ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாம்
ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாம்
ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாம்
ADDED : ஜூன் 14, 2025 07:41 AM
குளித்தலை: குளித்தலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், இனுங்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குளித்தலை நகராட்சி இணைந்து, ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா, நகராட்சி கமிஷனர் நந்தகுமார், பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் முகாமை தொடங்கி வைத்தார்.
அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் (மகப்பேறு) ஹேமாவதி. பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் குறித்து பேசினார்.
தொடர்ந்து, இனுங்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல் மருத்துவர் சபரீஷ், வாயில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் அதை தடுப்பது குறித்து கூறினார்.
துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அம்மா உணவக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பெண்கள், ஆண்களுக்கு புற்றுநோய் சம்பந்தமாக பரிசோதனை நடைபெற்றது.