ADDED : ஜூன் 02, 2025 04:06 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மஞ்சபுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுபாலா, 30; கடவூர் யூனியன் அலுவலகத்தில், தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மணிவேலு, 33; கொத்தனார். தம்பதிக்கு தர்ஷிகா, 7, சித்தார்த், 5, என, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிவேலு, தினந்தோறும் மது அருந்திவிட்டு வரும் பழக்கம் இருந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், மே, 15 காலை தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின், வழக்கம்போல், மணிவேலு கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி மதுபாலா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், மாயமான மணிவேலுவை தேடி வருகின்றனர்.