/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வெப்ப அலையால் முருங்கை விளைச்சல் சரிவு வெப்ப அலையால் முருங்கை விளைச்சல் சரிவு
வெப்ப அலையால் முருங்கை விளைச்சல் சரிவு
வெப்ப அலையால் முருங்கை விளைச்சல் சரிவு
வெப்ப அலையால் முருங்கை விளைச்சல் சரிவு
ADDED : மே 14, 2025 01:58 AM
அரவக்குறிச்சி, வரலாறு காணாத வெப்பத்
தால், முருங்கை விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.தமிழகத்தில் முருங்கை சாகுபடியில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி புகழ்பெற்றது. இங்கிருந்து முருங்கை காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 7,000 ஏக்கருக்கும் மேல் முருங்கை சாகுபடி செய்கின்றனர். தற்போது வரலாறுகாணாத வெப்பத்தால், விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது, விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக மார்ச் முதல் ஜூன் மற்றும் அக்., முதல் நவம்பர் வரை நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை மழை இல்லாததாலும் அதிக வெப்பத்தாலும், விளைச்சல் பாதியாக சரிந்துள்ளது. ஒரு சில மரங்களில், ஓரளவு மகசூல் கிடைத்தாலும் தரம் குறைந்து விட்டதால் விலை கிடைக்கவில்லை. அமராவதி, குடகனாறு தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் வறண்டுள்ளன.
எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தி, பாசனம் செய்து முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் மரங்களை பாதுகாக்க முடியவில்லை. பொதுவாக மகசூல் காலத்தில், ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் முருங்கை கிடைக்கும். ஆனால், தற்போது கோடை வெப்பத்தால், 60 சதவீத இழப்பை சந்தித்துள்ளோம். ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து, 300 முதல் 400 வரை முருங்கை காய்கள் கிடைக்கும். இப்போது சதை பற்று சுருங்கி விட்டது. இதனால் விலையும் குறைந்துள்ளது. அதே போன்று மயில் மற்றும் பூச்சிகளின்
தாக்கமும் அதிகம் உள்ளது. இவ்வாறு கூறினர்.
அரவக்குறிச்சி மொத்த முருங்கை விற்பனை வியாபாரி
கள் கூறுகையில், 'இந்தாண்டு விளைச்சல் குறைந்ததால்,
சந்தைக்கு முருங்கை காய்கள் வர த்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அரவக்குறிச்சியில் இருந்து கேரளா, சத்தீஸ்கர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் முருங்கை காய்கள் குறைந்துள்ளது. பொதுவாக சந்தைகளுக்கு ஒரு நாளைக்கு, 300 டன் முருங்கை வரத்தாகும். ஆனால் தற்போது, 150 முதல் 200 டன்னாக குறைந்துள்ளது.
கோடை வெப்பத்தின்
தாக்கத்தால், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


