Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாணிக்கவாசகர் பெருமானுக்கு குருபூஜை விழா கோலாகலம்

மாணிக்கவாசகர் பெருமானுக்கு குருபூஜை விழா கோலாகலம்

மாணிக்கவாசகர் பெருமானுக்கு குருபூஜை விழா கோலாகலம்

மாணிக்கவாசகர் பெருமானுக்கு குருபூஜை விழா கோலாகலம்

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM


Google News
ப.வேலுார்: -ப.வேலுார், சுல்தான்பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில், நேற்று மாணிக்கவாசகர் பெருமானுக்கு குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது.

முன்னதாக, மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், காலை, 6:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, விளக்கு பூஜை, புனித நீர் வழிபாடு, சக்தி விநாயகர் வழிபாடு, மாணிக்கவாசகர் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. 7:00 மணிக்கு திருவாசகம் முற்றோதல் எனும் ஞானவேல்வி ஆரம்பமானது. 8:30 மணிக்கு மாணிக்கவாசகர் பெருமானுக்கு, 16 வகை அபிஷேகம், வேள்வி யாகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, 18 அடியார்கள் மகேஸ்வர பூஜை நடத்தினர். மாலை, 6:00 மணிக்கு, திருவீதி உலா நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us