Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வரத்து குறைந்ததால்கொய்யா விலை உயர்வு

வரத்து குறைந்ததால்கொய்யா விலை உயர்வு

வரத்து குறைந்ததால்கொய்யா விலை உயர்வு

வரத்து குறைந்ததால்கொய்யா விலை உயர்வு

ADDED : செப் 01, 2025 02:20 AM


Google News
கரூர்:தமிழகத்தில் கொய்யா பழம் உற்பத்தியில், திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதில், பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, வரதாபட்டினம், கணக்கன்பட்டி, அமரபூண்டி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொய்யா பழம் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த பகுதியில், அறுவடை செய்யப்பட்ட கொய்யா பழம், ஆயக்குடி சந்தைக்கு நாள்தோறும், 200 டன் வரை வரத்தானது. அங்கிருந்து கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொய்யா பழம் அனுப்பப்படுகிறது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கொய்யா பழம் தேவைக்கு, திண்டுக்கல் மாவட்டத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த மாதம், ஒரு கிலோ கொய்யா பழம், 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பருவநிலை மாற்றம், திடீர் மழை, அதீத வெயில் ஆகிய காரணங்களால் கொய்யா பழம், ஆயக்குடி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், கொய்யா பழம் விலை உயர்ந்துள்ளது.

கரூர், வெங்கமேடு உழவர் சந்தையில் நேற்று, ஒரு கிலோ கொய்யா பழம், 35 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை விற்றது. வெளி மார்க்கெட்டில், 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்றது. இதனால், கொய்யா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us