/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புன்னம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் புன்னம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
புன்னம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
புன்னம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
புன்னம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
ADDED : ஜூன் 06, 2025 01:58 AM
கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் பஞ்சாயத்துக்குட்பட்ட நடுப்பாளையத்தில் கிராம சபை கூட்டம், பற்றாளர் தண்டபாணி தலைமையில் நடந்தது. பஞ்., செயலாளர் கோபால் தீர்மானங்களை வாசித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்)
கிருஷ்ணமூர்த்தி, பிளாஸ்டிக் மற்றும் நெகிழி பொருள்கள் பயன்படுத்த மாட்டோம், எளிதில் மக்கும் பொருள்களையே பயன்படுத்துவோம் என, உறுதிமொழி வாசித்தார்.
பின், முதல்வர் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தில், வீடுகள் புனரமைப்பு செய்திட இறுதி செய்யப்பட்ட தகுதியான பயனாளிகள் பட்டியல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.