/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா கரூர் எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 08, 2025 12:58 AM
கரூர், கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் உள்ள விவேகானந்தர் அரங்கில், 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் முருகன், தரக்குறியீடு மற்றும் சாதனைகள் குறித்த தரவுகள் பற்றி பேசினார். சிறப்பு விருந்தினராக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கல்வி கூட்டமைப்புகளின் தலைவர் சுசீந்திரன், டெக் மஹேந்திரா பணியாளர் சேர்க்கை மேலாளர் கீர்த்திநாயக் ஆகியோர் பேசினார். பின், 10 தங்க பதக்கம் மற்றும்46 தரவரிசை வைத்திருப்பவர்கள் உள்பட, 942 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இணை செயலாளர் சரண்குமார், செயல் இயக்குனர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.