செல்வ செழிப்பை வழங்கும் பகவதி அம்மன்
செல்வ செழிப்பை வழங்கும் பகவதி அம்மன்
செல்வ செழிப்பை வழங்கும் பகவதி அம்மன்
ADDED : ஜூன் 08, 2025 01:19 AM
கரூர், கரூர், முத்துராஜபுரம் ஸ்ரீபகவதி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.
கரூர், முத்துராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபகவதி அம்மன் கோவில், சமீபத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கின. பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன், மஹா கும்பாபிஷேக விழா தொடங்கியது. கரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த, தீர்த்தக்குட ஊர்வலத்தை தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை முதல் இரவு வரை, நான்கு கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன.
இன்று காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் ஆனந்த கிருஷ்ணன் ஆச்சார் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, கரூர் மாநகராட்சி, 3வது குழு தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வரும், 15 இரவு, 7:00 மணிக்கு செந்தில் கணேஷ், ராஜ லட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீபகவதி அம்மன் கோவில் கமிட்டியாளர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
ஆகம முறைப்படி திருப்பணி
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் முன்னோர்கள். இங்கு கோவிலே ஊராக உள்ளது என்று சொல்லலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகர, கிராமங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அம்மன், கோவில்களில் தெய்வமாக இருந்து பக்தர்களை தங்களது கடைக்கண்களால் பார்த்து, வளம் பெற செய்து வருகிறார்.
அந்த வரிசையில், கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அம்மன்கள் அனைத்து ஊர்களிலும் காவல் தெய்வமாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் குடி கொண்டுள்ளனர். மேலும், இந்துமத வழிபாட்டில் பிள்ளையாரை பற்றிய கணாதிபத்யம், முருகனை பற்றிய கவுமாரம், சிவனை பற்றிய சைவம், பெருமாளை பற்றிய வைணவம், அம்பாளை குறித்து சாக்தம் மற்றும் சூரிய முறைகளை கொண்டு நமது அகில உலகத்தையும் காக்க கூடிய அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியும், நமக்கு சகல நன்மைகளையும் வழங்கும் பகவதி அம்மன் மற்றும் பல தெய்வங்கள் அருளாட்சி செய்யும் கரூரில் முத்துராஜாபுரத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன், மாவடியான், முனியப்பன், அரசமரத்தடி ஆதிவிநாயகர், ராகு, கேது ஆகிய தெய்வங்கள் மற்றும் கோபுரம், வசந்த மண்டபம் ஆகியவை சிவ ஆகம சிற்ப சாஸ்திரம் முறைப்படி அமைக்கப்பட்டு, பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
குழந்தை பாக்கியம்
.கரூர் முத்துராஜாபுரம் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகி செல்வ செழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைப்பதுடன் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.