/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளை போலசமமாக பார்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளை போலசமமாக பார்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி
பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளை போலசமமாக பார்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி
பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளை போலசமமாக பார்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி
பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளை போலசமமாக பார்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி
ADDED : மார் 23, 2025 01:00 AM
பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகளை போலசமமாக பார்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி
கரூர்:''பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகள் போல சமமாக பார்க்க வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதி ராமன் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கூட்ட அரங்கில், மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது.
அதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதி ராமன் பேசியதாவது: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, நீதிமன்றங்கள் தீர்ப்பின் மூலம் பாதுகாப்பு அளித்து வருகிறது. ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாடுவதும், பெண் குழந்தை பிறந்தால் வேறு மாதிரியான சிந்தனை வருவதை தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் உலகளவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். பெண் குழந்தைகளை, ஆண் குழந்தைகள் போல சமமாக பார்க்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு, ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் தொடங்க வேண்டும். பாலினம் தொடர்பாக, பாகுபாடு நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. ஆண், பெண் என இருவரும் சமம்தான் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சீனிவாச ராகவன், சுமதி, எழுத்தாளர் சியாமளா ரமேஷ் பாபு, கவிஞர் சுவேதா ஆகியோர், பாலின சமத்துவம் குறித்து, பல்வேறு தலைப்புகளில் பேசினர். கருத்தரங்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரகாஷ், மாவட்ட கலெக்டர் தங்கவேல்,
எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, மருத்துவ கல்லுாரி முதல்வர் லோகநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.