ADDED : ஜூன் 09, 2025 03:40 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்.,ல் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் இருந்து கொட்டப்-படும் கழிவு குப்பைகள், பஞ்., துாய்மை பணியாளர் கொண்டு சேகரிக்கப்படுகிறது. வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டுச்-சென்று தரம் பிரிக்கின்றனர்.
தற்போது, குப்பை சேகரித்து குடியிருப்பு பகுதி, சாலையோர இடங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் சாலையோர பகுதி-களில் கழிவு குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இரவில், இந்த குப்பைக்கு தீ வைப்பதால், குடியிருப்பு பகுதி-களில் புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, பஞ்., நிர்வாகம் வார்டு-களில் சேகரிக்கப்படும் குப்பையை, குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரித்து எரிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.