/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாரியம்மன் கோவில் திருவிழா வேண்டுதல்கள் நிறைவேற்றம்மாரியம்மன் கோவில் திருவிழா வேண்டுதல்கள் நிறைவேற்றம்
மாரியம்மன் கோவில் திருவிழா வேண்டுதல்கள் நிறைவேற்றம்
மாரியம்மன் கோவில் திருவிழா வேண்டுதல்கள் நிறைவேற்றம்
மாரியம்மன் கோவில் திருவிழா வேண்டுதல்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 10, 2024 01:18 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் தேவேந்திர குல தெருவில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 10:00 மணியளவில் பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தல் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
சிலர், கைக்குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து, ராஜேந்திரம் மலையாள சுவாமி கோவில் மற்றும் முக்கிய வீதி வழியாக சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு, மருதுார் காவிரி ஆற்றில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து முக்கிய வீதி வழியாக சுவாமி திருவீதி உலா நடந்தது.