/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேன் டிரைவரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது வேன் டிரைவரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது
வேன் டிரைவரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது
வேன் டிரைவரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது
வேன் டிரைவரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 10, 2025 12:57 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, தனியார் ஓட்டல் வேன் டிரைவரை தாக்கியதாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஓரையூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார், 36. இவர், கரூரில் தங்கி கொங்கு மெஸ் என்ற தனியார் ஓட்டலில், வேலை செய்து வருகிறார்.
கடந்த, 8ல் சுரேஷ் குமார், ஓட்டலுக்கு சொந்தமான வேனை ஓட்டிக்கொண்டு, வேலாயுதம்பாளையம் அருகே, ஆலமரத்து காடு பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர்களை, ஓவர் டேக் செய்து முந்தி சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் சென்ற விக்னேஷ், 27, நரேன் பிரசாத், 21, மற்றொரு விக்னேஷ், 21, கார்த்திக், 21, ஆகியோர் சேர்ந்து கொண்டு, சுரேஷ் குமாரை அடித்துள்ளனர். இதுகுறித்து, சுரேஷ் குமார் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விக்னேஷ் உள்பட, நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.