Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தீ தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட அலுவலர் தகவல்

தீ தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட அலுவலர் தகவல்

தீ தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட அலுவலர் தகவல்

தீ தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட அலுவலர் தகவல்

ADDED : அக் 10, 2025 01:08 AM


Google News
கரூர் :இலவச தீ தடுப்பு பயிற்சி வழங்கப்படும் என, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வடிவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் உள்ள, அனைத்து தீயணைப்பு மீட்பு பணி நிலையங்களிலும் வாருங்கள் கற்கலாம் என்னும் அடிப்படையில், மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி நாளை, நாளை மறுநாள் (அக்., 11, 12) ஆகிய இரு நாட்கள் ஒரு மணி நேர பயிற்சி என்ற அடிப்படையில் காலை 10:00 முதல் 11:00 மணி வரையும், மதியம், 12:00 முதல் 1:00 மணி வரையும், மாலை 4:00 முதல் 5:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள், தன்னார்வலர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us