/உள்ளூர் செய்திகள்/கரூர்/நான் முதல்வன் திட்டத்தின் கீழ் களப்பயணம்நான் முதல்வன் திட்டத்தின் கீழ் களப்பயணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் களப்பயணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் களப்பயணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் களப்பயணம்
ADDED : ஜன 07, 2024 11:00 AM
அரவக்குறிச்சி: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்கள் கல்லுாரி களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, அரவக்குறிச்சி வட்டார வள மையம், 2023--24ம் கல்வி ஆண்டிற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் செயல்பாடுகளில் ஒன்றான கல்லுாரி களப்பயணம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நடந்தது. கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி, திண்டுக்கல் காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, மலைக்கோவிலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 118 மாணவர்கள் களப்பயணத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
களப்பயணம் மூலம், பல்கலையில் உள்ள பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுதல் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர். களப்பயணம் அழைத்து செல்வதற்கு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். களப்பயணத்தின் மூலம், மாணவர்கள் இடையே உயர்கல்வி படிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.