/உள்ளூர் செய்திகள்/கரூர்/முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலைமுருங்கை மரங்களில் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
ADDED : மே 25, 2025 01:28 AM
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை, பலத்த காற்று காரணமாக முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து வருவதால், மகசூல் பாதிக்கும் என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சி, ஈசநத்தம், சின்னதாராபுரம், ஆண்டிப்பட்டிக்கோட்டை, வேலம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், முருங்கை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மிதமான மழையுடன், காற்றும் வீசுவதால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து வருகின்றன. ஒரு சில பூக்கள் மட்டுமே மிஞ்சி உள்ளது.
பூக்கள் உதிர்ந்தால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காது என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது மரம் முருங்கை கிலோ, 28 ரூபாய், செடி முருங்கை கிலோ, 40 ரூபாய், கரும்பு முருங்கை கிலோ, 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவ்வப்போது மழை, காற்றும் வீசியதால் அனைத்து பூக்களும் உதிர்ந்து வருகின்றன. பூக்கள் உதிர்ந்து வருவதால், எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.