/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்புகிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 29, 2025 01:05 AM
கரூர், கரூர் அருகே, பாசன கிளை வாய்க்காலில் முளைத்துள்ள, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப் பகுதியில் சோளம் சாகுபடி பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. தற்போது, நெல் சாகுபடிக்காக பணிகள் நடப்பதால், அமராவதி அணையில் இருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர் அருகே சின்ன குளத்துப்பாளையம் வழியாக செல்லும், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மேலும், ஆகாயத்தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது.
எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்துள்ளது.