/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காற்றுக்கு உதிரும் மாங்காய்கள் விலையின்றி விவசாயிகள் தவிப்பு காற்றுக்கு உதிரும் மாங்காய்கள் விலையின்றி விவசாயிகள் தவிப்பு
காற்றுக்கு உதிரும் மாங்காய்கள் விலையின்றி விவசாயிகள் தவிப்பு
காற்றுக்கு உதிரும் மாங்காய்கள் விலையின்றி விவசாயிகள் தவிப்பு
காற்றுக்கு உதிரும் மாங்காய்கள் விலையின்றி விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூன் 16, 2025 07:37 AM
கரூர்: கரூர், க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஆறு மற்றும் கிணற்று பாசனம் மூலம், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்து வருகின்றனர். போதிய பருவ மழை இல்லாததால் கடந்தாண்டைவிட மா மரங்களில் விளைச்சல் குறைவாகவே இருக்கிறது. பங்கனப்பள்ளி, அல்போன்சா, காசா, கல்லாமை, செந்துாரம் ஆகிய வகை மாங்காய்கள் காய்த்து அறுவடையாகி வருகிறது.
சில நாட்களாக தென் மேற்கு பருவக்காற்று பலமாக வீசுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் கரூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ காற்றின் வீச்சு சற்று குறைவாக இருக்கும். தற்போது வீசும் பலத்த காற்றால், மாந்தோப்புகளில் மாங்காய்கள் உதிர்ந்து வருகின்றன. உரிய விளைச்சலை எட்டுவதற்கு முன்பே மாங்காய்கள் உதிர்ந்து கொட்டுவதால், அந்த மாங்காய்களை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால் உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். உதிர்ந்த மாங்காய்களை ஊறுகாய் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதால் மிகவும் குறைந்த விலைக்கே கேட்பதால் மிகவும் கவலையடைந்துள்ளனர்.